முன்பதிவு வசதியுடன் கூடுதல் ரெயில்கள்
முன்பதிவு வசதியுடன் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்
முன்பதிவு வசதியுடன் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் ரெயில்கள்
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சதாப்தி ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மதியம் 2.15 மணிக்கு வந்து சேரும்.
இதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
கோவை-சென்னை
கோவை-கே.எஸ்.ஆர். பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கோவையில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு பெங்களுரு சென்றடைகிறது. அதுபோல் ரெயில்பெங்களூருவில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவைக்கு வந்தடைகிறது.
கோவை-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. கோவையில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை செல்கிறது. இதுபோல் சென்னையில் 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு கோவையை வந்தடைகிறது.
புதுச்சேரி-மங்களூரு
எர்ணாகுளம்-பனஸ்வாடி வாராந்திர ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் 11-ந் தேதி மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.55 மணிக்கு பனஸ்வாடி செல்கிறது. இதுபோல் 12-ந் தேதி இரவு 7 மணிக்கு பனஸ்வாடியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.
புதுச்சேரி-மங்களூரு சென்ட்ரல் வாராந்திர ரெயில் வருகிற 15-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. 15-ந் தேதி மாலை 4.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. இதுபோல் 16-ந் தேதி மாலை 4.35 மணிக்கு மங்களூருவில் இருந்து ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது. இந்த கூடுதல் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்ய முடியும்.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story