கருமந்துறையில் சிலிண்டரில் கியாஸ் கசிந்ததால் 3 வீடுகளில் தீ


கருமந்துறையில் சிலிண்டரில் கியாஸ் கசிந்ததால் 3 வீடுகளில் தீ
x
தினத்தந்தி 27 March 2021 4:30 AM IST (Updated: 27 March 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

கருமந்துறையில் சிலிண்டரில் கியாஸ் கசிந்ததால் 3 வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது.

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறை சின்ன மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் தனியாக வசித்து வருகிறார். தனது வீட்டில் லட்சுமி சமையல் செய்த போது,  சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்தது. உடனே அந்த வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ அருகில் இருந்த சிவகுமார் (45), லட்சுமணன் (40) ஆகியோரது வீடுகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் கருமந்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 3 வீடுகளில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.

Next Story