தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களை பாதுகாப்பேன்; தனி நலம் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன்
அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு சாத்தூர் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பகுதியான தூலுக்கன்குறிச்சி, அப்பநாயக்கன்பட்டி, அக்கரைபட்டி, மேலாண்மறைநாடு, வலையபட்டி, குகன்பாறை, அன்னபூரணியாபுரம், சிப்பிப்பாறை, வால்சாபுரம், நடுச்சத்திரம், கீழச்சத்திரம், மேலச்சங்கரபாண்டியாபுரம், கண்ணக்குடும்பன்பட்டி, ஜெகவீரன்பட்டி, அச்சங்குளம், கண்டியாபுரம் உட்பட அனைத்து கிராமங்களிலும் வாக்கு சேகரித்தபோது பேசுகையில் பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்.
இப்பகுதியில் தீக்காய சிகிச்சை சிறப்பு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பட்டாசு தொழிலாளர்களுக்கு என தனி சிறப்பு நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி குடிநீர், சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுப்பேன்.
மேலும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் எடப்பாடியாரின் நல்ல ஆட்சி தொடர, மக்களுக்கு நல்ல திட்டங்களை மீண்டும் வழங்கிட, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1500 வழங்கிடவும், அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா வாஷிங்மிஷன் வழங்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆன என்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டு கொண்டார்.
செல்லும் கிராமபுற பகுதிகள் எங்கும் பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கழக நிர்வாகிகள், தொண்டர்கள். பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பட்டாளி மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story