மீண்டும் மக்கள் பணியாற்ற என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்; ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம்


மீண்டும் மக்கள் பணியாற்ற என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்; ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரசாரம்
x
தினத்தந்தி 27 March 2021 5:45 AM IST (Updated: 27 March 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் மக்கள் பணியாற்ற என்னை வெற்றிபெற செய்யுங்கள் என ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பிரச்சாரம் செய்தார்.

அ.தி.மு.க.வேட்பாளர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதிஅ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்டகாட்டுகுறிச்சி, கோவிலூர், நடுவூர், ஈச்சங்கோட்டை, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், ஆதனக்கோட்டை, தெக்கூர், கருக்காடிப்பட்டி, கக்கரைக்கோட்டை, மண்டலகோட்டை, ஆயங்குடி, சேதுராயன் குடிகாடு, சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பல இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது :-

ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நான் அமைச்சராக இருந்த காலங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை மக்களின் பயன்பாட்டுக்காக செய்து தந்துள்ளேன். தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய மாணவர்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்கள். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன. ஒரத்தநாடு தொகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும். சாலை சீரமைப்பு, குடிநீர், மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற மீண்டும் எனக்கு வாய்ப்பு அளியுங்கள். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

பயிர்க் கடன்கள் தள்ளுபடி
மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் என பல்வேறு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் ரூ.12 ஆயிரத்து 140 கோடியை அரசு தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் வருடத்திற்கு 6 சிலிண்டரை இலவசமாகவும், குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாயும், வாஷிங்மெஷின், கட்டணமில்லாத கேபிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே மீண்டும் மக்கள் பணியாற்றிட அதிக வாக்கு 
வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story