இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேடசந்தூரில் தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் பேச்சு


பிரசாரத்திற்கு சென்ற எஸ்.காந்திராஜனை மாலை அணிவித்து வரவேற்றபோது
x
பிரசாரத்திற்கு சென்ற எஸ்.காந்திராஜனை மாலை அணிவித்து வரவேற்றபோது
தினத்தந்தி 27 March 2021 7:15 AM IST (Updated: 27 March 2021 7:18 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதி இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் வாக்குறுதி அளித்தார்.

தீவிர பிரசாரம்
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் வேட சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று வேடசந்தூர் வசந்தநகர், அரியப் பித்தம்பட்டி, தட்டார பட்டி, மல்வார்பட்டி, மாரம் பாடி, சாமிமுத்தன்பட்டி, தேவ கவுண்டன்பட்டி, சொட்ட மாயனூர், நாயக்க னூர், ஆவூர், சவேரியார்பட்டி, மரியமங்களபுரம், சிக்ராம் பட்டி, ஒத்தையூர், கொல்லனூர், தேவநாயக்கன்பட்டி, பூத்தாம்பட்டி, மாத்தினிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும் மாரம் பாடி புனித பெரியஅந்தோணி யார் ஆலயம், வேடசந்தூர் பெரியபள்ளிவாசலுக்கு சென்று 
வழிபட்டார். முன்ன தாக அவர் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் பிரசாரத்தில் பேசியதாவது:- கர்நாடகா மாநிலம் துப்பூர் கிராமத்துக்கு 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதுபோல் வேடசந்தூர் பகுதிக்கும் காவிரி மாயனூர் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். இதன்மூலம் வேட சந்தூர் வளமான பகுதி யாக மாறி விவசாயிகளின் வாழ்க்கை வசந்தம்பெறும். 

தொழிற்பேட்டை
நான் 1991-ல் வேடசந்தூர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது காவிரி குடிநீரை முதன் முறையாக கொண்டு வந்தேன். அதோடு மக்களின் கோரிக்கை அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றிய தால் என்னை குடும்பத்தில் ஒருவனாக கருதி மக்கள் பழகுகின்றனர். நான் எம்.எல்.ஏ.வானால் தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் தும் வகையில் தொழிற் பேட்டை அமைக்கப்படும். 

லட்சுமணம்பட்டி குடகனாற் றின் குறுக்கே அணை கட்டி பாசன வசதிகளை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகளில் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். வேடசந்தூர் அரசு மருத்துவமனை நவீனப் படுத்தப்படும்.வடமதுரை புறவழிச்சாலை யில் விபத்து ஏற்படுவதை தடுக்க மேம்பாலம் கட்டப் படும். வடமதுரையில் புதிய பஸ்நிலையம் அமைக்கப் படும். குஜிலியம்பாறையில் விளைபொருட்களுக்கான குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். தொகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.

தேர்தல் வாக்குறுதிகள்
தற்போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். குறிப்பாக கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4 ஆயிரம், 100 நாள் வேலைத்திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தப்படுவ துடன், கூலியும் ரூ.300-ஆக உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1500-ஆக உயர்த்தப்படும். சமையல் கியாஸ் சிலிண்டர், பெட் ரோல்-டீசல் விலை  குறைக்கப் படும். பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண வசதி செய்துதரப்படும். சிறு-குறு விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

கிராமங்களில் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு, அரசு பணியிடங்கள் நிரப் பப்படும், கர்ப்பிணிகளுக்கு ரூ.24 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அரசு பணி யிலுள்ள பெண்களுக்கு பிரசவ கால விடுப்பு 12 மாத மாக உயர்த்தப்படும். பட்ட தாரி பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.60 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டு 
உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது காங் கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மா.தண்டபாணி, வேடசந் தூர் ஒன்றிய தி.மு.க. செயலா ளர்கள் வீரா எஸ்.டி.சாமி நாதன் (தெற்கு), ஆர்.கவிதாபார்த்திபன் (வடக்கு), காங்கிரஸ் வட்டார தலைவர் காசிபாளையம் சி.சாமிநாதன், காங்கிரஸ் பிரமுகர் நம்பி என்ற நெப்போலியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி பாலமுருகன், தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணைஅமைப் பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், ஒன்றிய துணைச்செயலாளர் நாகப்பன், ஒன்றிய பொருளாளர் கவிதாமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story