திருவாரூர் ஒன்றியத்தில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்குசேகரிப்பு; பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு


திருவாரூர் ஒன்றியத்தில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்குசேகரிப்பு; பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
x
தினத்தந்தி 27 March 2021 7:45 AM IST (Updated: 27 March 2021 7:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒன்றியத்தில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்குசேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வாக்குசேகரிப்பு 
திருவாரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் நேற்று திருவாரூர் ஒன்றியத்தில் தண்டலை, கீழகாவதுகுடி, நடப்பூர், செருகுடி, வைப்பூர், செருமங்கலம், வடசேரி, பழவனக்குடி, அடியக்கமங்கலம், புதுப்பத்தூர், தப்பலாம்புலியூர் உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுக பெண்கள் திரண்டு வந்து அவருக்கு  ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

தண்டலையில் பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

உங்களுடைய குரலுக்கு நான் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். மீண்டும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறேன். நீங்கள் 
என்னை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்‌. நான் சட்ட சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் உங்களுடைய குரலுக்கு ஓடிவந்து உழைப்பேன். 

நடவடிக்கை 
தொகுதியின் வளர்ச்சிக்கு முழுமையாக என்னை ஈடுபடுத்தி கொள்வேன். ஏழை, எளிய, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை  காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருவாரூர் சட்டசபை தொகுதி மக்கள் அன்புடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இவ்வாறு ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் பேசினார். 

அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story