மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு அரசின் திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வருவேன்; தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.கதிரவன் போட்டியிடுகிறார்.
நேற்று அவர் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட முசிறி ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொது மக்களிடம் கூறியதாவது: தொகுதி முழுவதும் குடிநீர் வசதி மேம்படுத்தப்படும். அனைத்து பகுதிகளுக்கும் சாலைவசதிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக முடித்து கொடுக்கிறேன். தொகுதி களில் உள்ள அனைத்து வழிகளிலும் நீராதாரத்தை மேம்படுத்துதல், அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எனது மருத்துவமனை மூலம் இலவச மருத்துவம் வழங்கப்படும்
என்று பல்வேறு வாக்குறுதி களை அளித்தார். ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
பணம் சம்பாதிக்க என்னிடம் பல தொழில்கள் உள்ளது. மக்கள் சேவைதான் என் எண்ணம். அதுதான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது. அரசியலில் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கும் குணம் என்னிடம் இல்லை. நான் சட்டமன்ற உறுப்பின ரானதும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் தொகுதிக்கு முழுமையாக கொண்டு வருவேன். ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் உள்ள முக்கிய தேவைகளை முழுமை யாக நிறைவேற்றுவேன் என்றார்.
அவருடன் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story