துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பச்சைமலையில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு


அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற போது
x
அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற போது
தினத்தந்தி 27 March 2021 10:45 AM IST (Updated: 27 March 2021 10:41 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் துறையூர் அடுத்த சிங்களாந்தபுரத்தில் உள்ள சாமாயி என்ற அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அவர், விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரசாரம் செய்தார். அப்போது, சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, தான் செய்த நலத்திட்ட உதவிகளையும், இனி செய்யக்கூடிய நலத்திட்டங்களையும் எடுத்துக்கூறி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பச்சைமலையில் பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர் இந்திராகாந்திக்கு, மலைவாழ் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பிரசாரத்தின் போது, துறையூர் ஒன்றிய செயலாளர் சேனைசெல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன். காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன், வண்ணாடு சரோஜாமுத்துராமன் உள்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Next Story