வாக்குச்சாவடிகளில் பொருத்த 7 ஆயிரம் வெப் கேமராக்கள் - கலெக்டர் ஆய்வு


வாக்குச்சாவடிகளில் பொருத்த 7 ஆயிரம் வெப் கேமராக்கள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2021 5:10 PM IST (Updated: 27 March 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் உள்பட 4 மாவட்ட வாக்குச்சாவடிகளில் பொருத்த 7 ஆயிரம் வெப் கேமராக்கள் தயாராக உள்ளன. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே அங்கு வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பயன்படுத்த 7 ஆயிரம் வெப் கேமராக்கள் வேலூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டு அங்கு டேட்டா கார்டு, சிம் கார்டு, வெப் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. 

இதனைக் கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வாக்குப்பதிவு அன்று ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வெப் கேமரா மூலம் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். 

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story