கண்மாய்க்கு சென்ற வாலிபர் பிணமாக மீட்பு
கண்மாய்க்கு சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோழவந்தான்,மார்ச்
சோழவந்தான் அருகே உள்ள மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அருண்குமார் (வயது 27). இவர் நேற்று முன் தினம் இரவு தனது நண்பர்கள் அரிச்சந்திரன், சடையாண்டி ஆகியோருடன் சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை அரிச்சந்திரன், சடையாண்டி ஆகியோர் அருண்குமாரின் வீட்டிற்குச் சென்று, நாங்கள் கண்மாய்க்கு சென்றோம். அருண்குமாரை திடீரென காணவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கண்மாய்க்கு சென்று பார்த்தபோது அருண்குமார் கண்மாய் நீரில் பிணமாக மிதந்தார். இது குறித்து அருண்குமாரின் சகோதரர் திவாகர் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து அரிச்சந்திரன் மற்றும் சடையாண்டி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story