திருத்தணி நகரில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 25 பேர் வாக்களிப்பு


திருத்தணி நகரில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 25 பேர் வாக்களிப்பு
x
தினத்தந்தி 27 March 2021 9:45 PM IST (Updated: 27 March 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி நகரில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 25 பேர் வாக்களிப்பு தேர்தல் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரித்தனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி நகரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்க வசதியாக 29 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.டி.ஓ. சத்யா உத்தரவுப்படி அவர்களிடமிருந்து தபால் வாக்குகள் பெற வசதியாக வருவாய்த்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் திருத்தணி நகரத்தில் வசிக்கும் முன்பதிவு செய்து இருந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேற்று வருவாய்த்துறையினர் நேரடியாகச் சென்று வாக்குகளை பதிவு செய்து பெற்று வந்தனர்.

திருத்தணி நகரில் மட்டும் மொத்தம் 29 பேரில், 25 பேர் தங்கள் வீடுகளிலிருந்து தங்களின் விருப்பமான கட்சிக்கு வாக்குகளை பதிவு செய்தனர். மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். மற்ற 3 பேரும் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். விடுபட்ட 3 பேருக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளிக்கும் விதமாக அவர்களது வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு பெற முயல்வோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story