வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கமாண்டோ பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழ்
வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் கமாண்டோ பயிற்சி பெற்ற போலீசாருக்கு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் தமிழ்நாடு போலீஸ் தென்மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தை சேர்ந்த ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த போலீசார் 82 பேருக்கு 8 வாரகால கமாண்டோ பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சுயமாக பொதுமக்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்பு போலீஸ் துறையில் அதிகமாக உள்ளது. இந்த துறையில் நீங்கள் பணியாற்றுவது மிகவும் பெருமைக்கு உரியதாகும். நீங்கள் வரும் காலங்களில் பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று போலீஸ் துறையில் உயர்ந்த அதிகாரிகளாக வரவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் லேம்கான், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட கமாண்டோ பயிற்சியாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story