ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை்தொடர்ந்து தினமும் உற்சவா் பொலிந்து நின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுவாமி பொலிந்து நின்றபிரான், புதுப்பித்த தேரில் எழுந்தருளினார். தொடா்ந்து திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயா், ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயா் மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தோ் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story