ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டைபகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகள், கறிக்கோழி உற்பத்திபண்ணைகள், நூல் மில்கள்,பனியன் சார்ந்ததொழில்கள்.
சுல்தான்பேட்டை,
கட்டுமானப் பணிகள்,காற்றாலைகள் அமைத்தல், டவர் லைன் அமைத்தல்,சிறு தொழில்கள் செய்தல்உள்ளிட்ட பல்வேறு தொழில்க ளில்திருச்சி, மதுரை, விருதுநகர்,தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்டபல்வேறு மாவட்டத்தைச்சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில்,பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை
பார்த்து வருகின்றனர்.இவர்களில்பலருக்கு இன்னும்குடும்ப அட்டை, வாக்காளர் அடையாளஅட்டைபோன்றவைசொந்தஊர் முகவரியில் தான்உள்ளது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 6-ந் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதாஎன இரண்டு முக்கிய ஆளுமைகள் இல்லாதநிலையில், அ.தி.மு.க., தி.மு.க தலைமையிலானகூட்டணியினர் ஆட்சியை பிடிக்க கடுமையாகமோதி வருகின்றனர். இதன் காரணமாக சட்டமன்ற தேர்தல்விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றபொள்ளாச்சி பகுதியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட தொழிலாளர்கள்,தொழில்உரிமையாளர்கள்தங்கள்பகுதியில் போட்டியிடும் தங்கள் மனதிற்கு பிடித்த வேட்பாளர்களுக்குவாக்கு அளிப்பதற் காக தங்கள் சொந்தஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
நேற்று முதல் அவர்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு நாளும் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேர்தலுக்கு முந்தய நாட்கள் வரை அவர்கள் ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.இருப்பினும்,
தேர்தலை யொட்டி மேலும், சில தினங்கள் விடுமுறை பெற்றுக்கொண்டு சொந்தஊருக்கு செல்கிறோம்.பொள்ளாச்சி, திருப்பூர், கோவையில் இருந்து வேன்,பஸ்கள், சுற்றுலாவாகனங்கள் மூலம் சொந்தஊர் செல்வோம்.
தேர்தல் முடிந்த பின், ஒரு சில நாட்கள் ஊரில்தங்கிவிட்டு, உற்றார், உறவினர்களை சந்தித்துபேசியும், ஒன்றாக அமர்ந்துஉணவு அருந்தி மகிழ்ந்து, மீண்டும்வேலைக்கு பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிக்குதிரும்பி விடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story