இதய பகுதியில் கத்திக்குத்துப்பட்ட வாலிபருக்கு அறுவை சிகிச்சை
இதய பகுதியில் கத்திக்குத்துப்பட்ட வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
கோவை,
கோவை பூசாரிப்பாளையம் வேடப்பட்டியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் இதயம் மற்றும் வயிற்று பகுதியில் கத்திக்குத்து பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்தததில் இதயத்தில், ஒரு அறையில் (வலது வென்ட்ரிக்கல்) கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ரத்தம் கசிவது தெரியவந்தது. எனவே அறுவை சிகிச்சை செய்து ரத்த கசிவை சரி செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் சீனிவாசன், மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த 32 வயது நபரின் இதய பகுதியில் கத்திக்குத்துப்பட்ட இடத்தில்வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
இதனால் மருத்துவ குழுவினரை ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பாராட்டினார்.
Related Tags :
Next Story