இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள அயன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி திவ்யா (வயது 25). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்கு சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகாததால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் திவ்யா சம்பவத்தன்று எலி பேஸ்ட் என்ற விஷமருந்தை கரைத்து குடித்து உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.