கோவில் கோபுர கலசங்களை திருட முயற்சி


கோவில் கோபுர கலசங்களை திருட முயற்சி
x
தினத்தந்தி 27 March 2021 11:39 PM IST (Updated: 27 March 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே கோவில் கோபுர கலசங்களை திருட முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான்:
வலங்கைமான் அருகே கோவில் கோபுர கலசங்களை திருட முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
அக்னிபுரீஸ்வரர் கோவில் 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பூனா இருப்பு கிராமத்தில் பழமையான அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் சிவன், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளன. இந்தநிலையில் நேற்று அதிகாலை இக்கோவிலின் அருகில் உள்ள வயல் பகுதியில் கோவில் கோபுர செம்பு கலசங்கள் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்த போது அந்த கலசங்கள் அக்னிபுரீஸ்வரர்கோவில் கோபுர கலசங்கள் என்பதும், இதனை மர்மநபர்கள் திருட முயன்றதும் தெரியவந்தது. 
கலசங்கள் மீட்பு 
இதுகுறித்து கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து வயலில் கிடந்த கோபுர கலசங்களை மீட்டனர். கலசங்களை மர்மநபர்கள் திருடி சென்று வயலில் எதற்காக வீசி சென்றார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story