மதுரையில் மேலும் 38 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி


மதுரையில் மேலும் 38 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
x
தினத்தந்தி 28 March 2021 12:07 AM IST (Updated: 28 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மேலும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரை, மார்ச்
மதுரையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மேலும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி, ஜூன், ஜூலை, மாதங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல் இந்த ஆண்டும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையை பொறுத்தமட்டில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 21 ஆயிரத்து 661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 26 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 20 ஆயிரத்து 970 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
உயிரிழப்புகள்
பாதிப்பு அதிகரித்து வருவது போல் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. ஒரு மாதத்திற்கு மேல் உயிரிழப்புகள் நிகழாமல் இருந்த நிலையில், கடந்த 2 தினங்களாக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தார்.
இதுபோல், நேற்றைய நிலவரப்படி மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 227 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வரும் காலங்களிலும் கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கொரோனா பரவலை தடுத்திட வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விதிமுறைகளை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story