தி.மு.க.வேட்பாளர் பிரசார வாகனத்தின் கண்ணாடி உடைப்பு


தி.மு.க.வேட்பாளர் பிரசார வாகனத்தின்  கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 28 March 2021 12:09 AM IST (Updated: 28 March 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருமயம் அருகே தி.மு.க.வேட்பாளரின் பிரசார வாகனத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமயம், மார்ச்.28-
திருமயம் அருகே தி.மு.க.வேட்பாளரின் பிரசார வாகனத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்ணாடி உடைப்பு
 திருமயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரகுபதி  முள்ளிப்பட்டி கிராமத்துக்கு வாக்குசேகரிக்க சென்றார். அப்போது கிராமத்திற்குள் செல்ல முடியாத வகையில் சாலையில் சிலர் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்திருந்தனர்.  இதனைத்தொடர்ந்து தடுப்புகளை அகற்றிவிட்டு ரகுபதி முள்ளிப்பட்டி கிராமத்தில் பிரசாரம் செய்துவிட்டு அம்மன்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் ரகுபதியின் பிரசார வாகனம், அதன் பின்னால் வந்த மற்றொரு வாகனம் மீது கல் வீசி தாக்கினர்.
போலீசில் புகார்
 இதில் 2 வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன. ஆனாலும் வேட்பாளர் ரகுபதி  பிரசாரத்தை  தொடர்ந்தார். இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் ேபரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story