சிறுவனை சித்ரவதை செய்த தாய் 2வது கணவருடன் கைது


சிறுவனை சித்ரவதை செய்த தாய் 2வது கணவருடன் கைது
x
தினத்தந்தி 28 March 2021 12:12 AM IST (Updated: 28 March 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

சிறுவனை சித்ரவதை செய்த தாய் 2வது கணவருடன் கைது செய்யப்பட்டார்.

வாடிப்பட்டி,மார்ச்
மதுரை சமயநல்லூர் சின்னையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 24). இவருக்கும், முருகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் மகன் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு.
இந்த நிலையில் முருகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகனின் பெற்றோர் பெண் குழந்தையை தங்களுடன் வைத்துக் கொண்டனர்.
4 வயது மகனை சுகன்யா வளர்த்து வந்தார். இந்த நிலையில் சுகன்யா கட்டிட வேலைக்கு சென்று வந்தபோது சக தொழிலாளி கஜேந்திரன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சுகன்யாவின் 4 வயது மகனை கஜேந்திரன் அடித்து சித்ரவதை செய்து வந்ததாகவும், இதற்கு சுகன்யா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் சுகன்யா தனது மகனை நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற பெண்கள் சிறுவனை மீட்டு சமயநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரி பாண்டியராஜன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரன், சுகன்யா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சுகன்யாவிடம் இருந்து அவரது மகனை மீட்டு கருமாத்தூர் சிறுவர் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story