ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; 4 வயது சிறுமி பரிதாப சாவு


ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; 4 வயது சிறுமி பரிதாப சாவு
x
தினத்தந்தி 28 March 2021 12:14 AM IST (Updated: 28 March 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். மேலும் தாத்தா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை, மார்ச்.28-
ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். மேலும் தாத்தா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிறுமி சாவு
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவர் நேற்று இரவு 7 மணி அளவில் தனது பேரக்குழந்தைகள் யாக்‌ஷினி (4), யோகித் (6) மற்றும் மனைவி ஆகியோருடன் ஸ்கூட்டரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
 அப்போது பின்னால் புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி சென்ற அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி வண்டியில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர். யாக்‌ஷினி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story