திருப்பூரில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூரில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர், மார்ச்.
திருப்பூரில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிளஸ்-2 மாணவனுக்கு கொரோனா
திருப்பூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூரில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் 400 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த வாரம் பள்ளிக்கு வந்த இடுவாயை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் அவர் விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் இருந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்த போது சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்ததால், சந்தேகம் அடைந்த மாணவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கிருமிநாசினி தெளிக்கும் பணி
இதனைத்தொடர்ந்து மாணவனுக்கு தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் வகுப்பறைகளில் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தினமும் நடந்து வருகிறது.
இதுபோல் பள்ளி மாணவர்களுக்கும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள், சுகாதாரத்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவனின் வகுப்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story