தாராபுரத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக பிராமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தாராபுரத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடியும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக பிராமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தாராபுரம்:
தாராபுரத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக பிராமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிரதமர் வருகை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் எல்.முருகன் உள்ளிட்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 12.50 மணிக்கு தாராபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்று பேசுகிறார்கள்.
பிரமாண்ட மேடை
பிரதமர் வருகையையொட்டி தாராபுரத்தில் உடுமலை செல்லும் சாலையில் மாருதி நகர் அருகே சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக இரவும் பகலுமாக நடந்து வருகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா சென்று அங்குள்ள பா.ஜ.க.வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் தாராபுரம் வந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும் மாநிலத் தலைவருமான எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தீவிர சோதனை
பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி தாராபுரம் நகரம் முழுவதும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. முக்கிய சாலையில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை அமைக்கப்படும் பகுதியில் செல்ல தகுந்த அடையாள அட்டைகள் காட்டிய பின்பு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த பணிகளை பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story