கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 209 வாக்காளர்களிடம் தபால் வாக்குகள்


கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 209 வாக்காளர்களிடம் தபால் வாக்குகள்
x
தினத்தந்தி 28 March 2021 1:02 AM IST (Updated: 28 March 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

209 வாக்காளர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதானவர்களில் 285 பேர் தங்களுக்கு தபால் ஓட்டுவேண்டுமென விண்ணப்பித்தனர். இதனை தொடந்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும், வேட்பாளர்களின் பெயர், அவர்களது சின்னங்கள் அடங்கிய ஓட்டுச்சீட்டு அச்சிடப்பட்டது. அவற்றை தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்த 285 வாக்காளர்களிடமும் நேரில் கொண்டு சென்று கொடுத்து அவர்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கும் வகையில் அதிகாரிகள் ஓட்டுப்பெட்டிகளை நேரடியாக அவர்களது வீடுகளுக்கு நேற்று முன்தினம் முதல் எடுத்து சென்றனர். முதல்நாளான நேற்று முன்தினம் 209 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மீதமுள்ள 76 பேரிடமும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளைக்குள் தபால் வாக்குகள் பெறப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Next Story