விராலிமலையில் போலீசார் கொடி அணிவகுப்பு


விராலிமலையில் போலீசார்  கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 28 March 2021 1:05 AM IST (Updated: 28 March 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

விராலிமலை, மார்ச்.28-
வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விராலிமலையில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பை புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு செரினா பேகம்  தொடங்கி வைத்தார். கொடி அணிவகுப்பானது விராலிமலை காமராஜர் நகரில் தொடங்கி புதிய பஸ் நிலையம், கடைவீதி, சோதனைச்சாவடி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வழியாக சென்று விராலிமலை போலீஸ்நிலையத்தில் நிறைவுபெற்றது. இதில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

Next Story