புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார் செய்வதற்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார் செய்வதற்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் செய்வதற்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் விதிமீறல் தொடர்பாக புகார் செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2166 என்ற எண்ணிலோ அல்லது 04562 252100 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
நடவடிக்கை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம்.
புகார் செய்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். தெரிவிக்கப்படும் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story