தேர்தல் விதிமீறல்; 164 வழக்குகள் பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம்,
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை மாவட்டத்தில் அ.தி.மு.க. மீது 47 வழக்குகளும், அ.ம.மு.க. மீது 23 வழக்குகளும், தி.மு.க. மீது 42 வழக்குகளும், காங்கிரஸ் கட்சி மீது 3 வழக்குகளும், பா.ஜ.க. மீது 7 வழக்குகளும், எஸ்.டி.பி.ஐ. மீது 2 வழக்குகளும், நாம் தமிழர் கட்சி மீது 7 வழக்குகளும், தே.மு.தி.க. மீது 4 வழக்குகளும், சி.பி.ஐ. மற்றும் மார்க்சிஸ்ட், நாம் இந்தியர், இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் மீது தலா ஒரு வழக்கும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மீது 3 வழக்குகளும், இதர கட்சியினர் மீது 22 வழக்குகளும் என மொத்தம் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story