சக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொற்று இல்லை


சக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொற்று இல்லை
x
தினத்தந்தி 28 March 2021 1:26 AM IST (Updated: 28 March 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

வாடிப்பட்டி,மார்ச்
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக ஆசிரியர்களும், மாணவர்களும் அச்சத்திற்குள்ளாயினர். இதைத் தொடர்ந்து கச்சைக்கட்டி அரசு மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் பாண்டியன் தலைமையில் மருத்துவக் குழுவினர் 101 மாணவர்கள், 24 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதன் முடிவு நேற்று வெளியான நிலையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கூடம் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று தலைமையாசிரியர் சரவணமுருகன் தெரிவித்தார்.

Next Story