விதிகளை மீறினால் நடவடிக்கை


விதிகளை மீறினால் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2021 1:30 AM IST (Updated: 28 March 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலையொட்டி மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் நடத்தும் மதுபான கடைகள் ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 6-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மேற்படி உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மற்றும் தனியார் டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கூறினார். 



Next Story