திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
ஏர்வாடி, மார்ச்:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
பங்குனி திருவிழா
திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நம்பி சுவாமிகள் 5 திருக்கோலங்களில் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும்.
இந்த நிலையில் இந்தாண்டு திருவிழா தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. விழாவை முன்னிட்டு நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
விழாவின் 5-ம் நாளான வருகிற 31-ந் தேதி இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். அதன் பின்னர் மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story