சுயேச்சை வேட்பாளரின் காருக்கு தீ வைப்பு


சுயேச்சை வேட்பாளரின் காருக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 28 March 2021 1:33 AM IST (Updated: 28 March 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

சுயேச்சை வேட்பாளரின் காருக்கு தீ வைப்பு

மேலூர்,மார்ச்
மேலூர் அருகே உள்ள குமுட்ராம்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி (வயது 42). மேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் மேலூரில் இருந்து அழகர்கோவில் ரோட்டில் காரை ஓட்டிச் சென்றார். நான்கு கண் பாலம் அருகே வந்தபோது கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் மேலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து சிவசாமி மேலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத 2 பேர் வழிமறித்து கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், தான், தப்பி ஓடி உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story