பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது


பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 March 2021 1:57 AM IST (Updated: 28 March 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த தமிழரசனின் மகன் அன்பு (வயது 30). இவர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நின்று கொண்டு, அங்கு வந்த சிறுவாச்சூரை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் சரவணனிடம்(25), பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சரவணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அன்புவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசனும் சேர்ந்து பெரம்பலூரில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அந்த தனியார் தங்கும் விடுதியில் இருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story