திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 March 2021 2:10 AM IST (Updated: 28 March 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெரம்பலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, கிருஷ்ணாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விஜய் (வயது 22). இவரை பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் போலீசார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். விஜய் விடுதலையாகி வெளியே வந்தால் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரின் பரிந்துரையின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி சிறையில் உள்ள விஜயிடம் அரும்பாவூர் போலீசார் நேற்று வழங்கினர்.

Next Story