நெல்லை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா


நெல்லை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 March 2021 2:13 AM IST (Updated: 28 March 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. களக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும், நெல்லை சிந்துபூந்துறை செல்விநகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர நெல்லை மாநகர பகுதி, பாளையங்கோட்டை யூனியன், ராதாபுரம், சேரன்மாதேவி, அம்பை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,990 உயர்ந்துள்ளது. நேற்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,648 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 101 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story