சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்
சிதம்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் பாண்டியநாயகர் என்கிற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கீழரதவீதியில் அலங்கரிப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேர் புறப்பட்டது. கீழரத வீதியில் புறப்பட்ட தேர், 4 வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story