சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 55 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 55 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 March 2021 2:16 AM IST (Updated: 28 March 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 55 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 55 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 37 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று அதைவிட அதிகரித்து 55 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26 பேர், வீரபாண்டியில் 6 பேர், மேட்டூரில் 5 பேர், எடப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கொளத்தூர், மேச்சேரி, கெங்கவல்லி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும், காடையாம்பட்டி, நங்கவள்ளி, சங்ககிரி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
277 பேருக்கு சிகிச்சை
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 298 ஆக அதிகரித்து உள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 41 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 277 பேருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story