தலைவாசல் அருகே தே.மு.தி.க. நிர்வாகி உள்பட 2 பேர் கார் மோதி பலி
தலைவாசல் அருகே தே.மு.தி.க. நிர்வாகி உள்பட 2 பேர் கார் மோதி பலியானார்கள்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே தே.மு.தி.க. நிர்வாகி உள்பட 2 பேர் கார் மோதி பலியானார்கள்.
தே.மு.தி.க. நிர்வாகி
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தியாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). நாவக்குறிச்சியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (44). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள் ஆவர். செந்தில்குமார் தே.மு.தி.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.
2 பேரும் தலைவாசல் அருகே உள்ள ஆரத்திஅகரம் கிராமத்துக்கு நேற்று காலை கட்டிட வேலைக்காக சென்றிருந்தனர். மதியம் 2 மணி அளவில் ஆரத்தி அகரம் பிரிவு ரோடு அருகே சாலையோரம் உள்ள கடையில் கம்பங்கூழ் குடித்துவிட்டு சாலையோரம் நடந்து சென்றனர்.
2 பேர் பலி
அப்போது வீரகனூரில் இருந்து தலைவாசல் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக செந்தில்குமார், தமிழ்ச்செல்வன் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து உயிருக்கு போராடிய தமிழ்ச்செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
கார் மோதி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story