ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்தயானைகள்


ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்தயானைகள்
x
தினத்தந்தி 28 March 2021 2:58 AM IST (Updated: 28 March 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே வாகனங்களை யானைகள் வழிமறித்தன.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி ஆசனூரில் உள்ள திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. அவ்வாறு செல்லும் யானைகள் சில நேரங்களில் சாலையின் நடுவே அங்கு இங்குமாக சுற்றித்திரிவது வழக்கம்.
இந்த நிலையில் ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதிக்கு நேற்று 4 யானைகள் வந்தன. பின்னர் அந்த யானைகள் சாலையின் நடுவில் நின்றன. சாலையை வழிமறித்து யானைகள் நின்றதை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் தங்களுடைய வாகனங்களை அப்படியே நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 15 நிமிடம் அங்கேயே நின்று கொண்டிருந்த 4 யானைகளும் பின்னர் வனப்பகுதிக்குள் தானாக சென்றன. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. 

Next Story