மகுடஞ்சாவடி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்


மகுடஞ்சாவடி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 28 March 2021 3:32 AM IST (Updated: 28 March 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

மகுடஞ்சாவடி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இளம்பிள்ளை:
மகுடஞ்சாவடி அருகே உள்ள அழகனூர் நெட்டையனூர், ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கம்பம் நட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் விரதமிருந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்தல், அக்னி கரகம், பூங்கரகம், வாணவேடிக்கையும், இரவு சாமி திருவீதி உலாவும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story