பண்ணாரி கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க பந்தல் அமைப்பு


பண்ணாரி கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க பந்தல் அமைப்பு
x
தினத்தந்தி 28 March 2021 3:47 AM IST (Updated: 28 March 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்ய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்ய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 
பண்ணாாி அம்மன்
சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். 
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் விழா நடைபெறும். அப்போது தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குண்டம் விழா நடைபெறவில்லை. 
குண்டம் இறங்க அனுமதி இல்லை
இந்தநிலையில் இந்த ஆண்டு குண்டம் விழா வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்படவில்லை. பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குகிறார்கள். 
குண்டம் விழா நடைபெறும் 30-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக தகர பந்தல் அமைக்கப்பட்டு, மூங்கில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. 
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை சோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story