அந்தியூரில் தபால் ஓட்டு மையத்தை கலெக்டர் ஆய்வு


அந்தியூரில் தபால் ஓட்டு மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2021 10:21 PM GMT (Updated: 27 March 2021 10:21 PM GMT)

அந்தியூரில் தபால் ஓட்டு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அந்தியூர்
அந்தியூரில் தபால் ஓட்டு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். 
தபால் ஓட்டு
ஈரோடு, பெருந்துறை, கோபி தொகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக  அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மையத்துக்கு சென்று, தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, அதை அங்குள்ள வாக்குப்பெட்டியில் போட்டார்கள்.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ள பெட்டிகள் எவ்வாறு அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்? என்று அறிந்துகொள்ள கலெக்டர் கதிரவன் நேற்று அந்தியூர் சென்று ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர் அதிகாரிகளிடம், வாக்குப்பெட்டியை பாதுகாப்புடன் வைத்திருக்கவேண்டும். தபால் ஓட்டுப்போடும் இடத்தில் யாரும் செல்போன் எடுத்துச்செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார். அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ, தாசில்தார் வீரலட்சுமி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சக்திவேல், அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் மற்றும் மண்டல அதிகாரிகள் அப்போது உடன் இருந்தார்கள்.

Next Story