மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 105 ஆக உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 105 ஆக உள்ளது.
மேலும் 59 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மட்டும் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் நேற்று 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுபோல் 294 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி 224 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
19 ஆயிரத்து 105 ஆக உயர்வு
இதற்கிடையே மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 105 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 587 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுபோல் அபராதமும் விதித்து வருகிறது.
Related Tags :
Next Story