ரூ.1½ கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு


ரூ.1½ கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 28 March 2021 4:52 AM IST (Updated: 28 March 2021 6:11 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடியை உரிய ஆவணங்களை காண்பித்ததன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

 இந்தநிலையில் நேற்று ஊட்டி பெர்ன்ஹில் ரவுண்டானா பகுதியில் ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணம் இல்லாமல் ரூ.60 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுவரை ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.49 லட்சத்து 3 ஆயிரத்து 800, கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.95 லட்சத்து 53 ஆயிரத்து 920, குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.50 லட்சத்து 6 ஆயிரத்து 270 என மொத்தம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 63 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்ததன் அடிப்படையில் ரூ.1 கோடியே 56 லட்சத்து 38 ஆயிரத்து 878 உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Next Story