நாமகிரிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை,
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அய்யகவுண்டம்பட்டி குருக்கபுரத்தான் காடு பகுதியை சேர்ந்தவர் அருண் காங்கேயன் (வயது 30). இவருக்கும், ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியை சேர்ந்த சுதா (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்தநிலையில் கணவன். மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி 5 ஆண்டுக்குள் பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story