மக்களின் தேவையறிந்து செயல்படும் மாங்குடிக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்; கார்த்தி சிதம்பரம் எம்.பி பிரச்சாரம்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம் பி காரைக்குடி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நோக்கம்இந்தியை திணிப்பதுதான் ஏர்போர்ட், ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் இந்தியையே வலியுறுத்துகின்றனர். பாராளுமன்றத்தில் தமிழில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் அமைச்சர்கள் இந்தியில் தான் பதில் கூறு கின்றனர். நமது பிள்ளைகள் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை இந்தியில் எழுத வேண்டும் என்கின்றனர் இந்தி தெரியாதவர்களை இந்தியர் அல்ல என்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின்நிழல் கூடஇல்லாத தமிழர்களால் நடத்தப்படும் ஆட்சி தமிழ் நாட்டிற்கு தேவை. திமுக தலைமையிலான கூட்ட ணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடிக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.ஊராட்சி மன்ற தலைவராக சிறப்பாக பணி யாற்றிய காங்கிரஸ் கட்சியில் சாதாரண தொண்டரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இவர் மக்களின் தேவையறிந்து செயல்படுவார். அவரிடம் நேரடியாக ஏன் போன் மூலம் கூட தொடர்பு கொண்டு குறைகளைச் சொல்ல முடியும்.
மாங்குடி உங்களுக்கு நல்ல சேவகராக இருப்பார்.தமிழன் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள்தான் தற்போதும் களம் காண்கின்றனர். காரைக்குடி சட்டமன்ற தேர்தல் முடிவும் பாராளுமன்ற தேர்தல் முடிவு போலவே இருக்கும். காங்கிரஸ் கட்சி வெல்லும். இவ்வாறு பேசினார்.
வேட்பாளர் மாங்குடி பிரச்சாரத்தில் கூறியதாவது,
நீங்கள் எந்த நேரத்தில் வேண்டு மானாலும் என்னை சந்திக்கலாம் நான் உங்களில் ஒருவன்.பகுதி மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். உங்கள் தேவையறிந்து உதவிகளை செய்வேன். தொகுதியின் வளர்ச்சிக்கு, உலகின் வளர்ச்சிக்கே வழி காட்டும் மக்கள் தலைவர் பசிதம்பரம் வழி காட்டுதலில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வளர்ச்சிக்காக சுழன்று பணியாற்றும் கார்த்திக் சிதம்பரம் எம்.பி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானகே ஆர்ராமசாமி எம்.எல்.ஏ ஆகியோரின் வழிகாட்டுதலில் தொகுதியை வளர்ச்சி உடையதாகவும் சிறப்புடையதாகவும் மாற்றுவேன். அதற்குகை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் இவ்வாறு பேசினார்.
பிரச்சாரத்தில் தி.மு.க நகரச் செயலாளர் குணசேகரன் காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி மேயப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story