ஒருமுறை வாக்களியுங்கள், 20 ஆண்டுகால நலத்திட்டங்களை செய்து முடிப்பேன்; சாத்தூர் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் பேச்சு
சாத்தூர் நகர்ப் பகுதிகளில் அ.ம.மு.க வின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எம்.எல்.ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் ஒருமுறை வாக்களியுங்கள், 20 ஆண்டுகால நலத்திட்டங்களை செய்து முடிப்பேன் என்று பேசினார்.சாத்தூர் நகர் பகுதிகளான நந்தவனப்பட்டி நடுத்தெரு, ரயில்வே பீடர் ரோடு, நாடார் கீழத்தெரு, தேரடி தெரு, பெருமாள் கோவில் தெரு, பங்களா தெரு, ஆர்.சி கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ராஜகோபால் கல்யாண மண்டபம் தெரு, ராணி மஹால் தெரு உள்ளிட்ட நகர வார்டு பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று அ.ம.மு.கவின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று குடும்பத்தலைவிகள், பெரியவர்கள், சிறு கடை வியாபாரிகளிடமும் வாக்குகள் சேகரித்தார்.
வாக்கு சேகரிக்கும்போது பேசிய எம்.எல்.ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் 24 வார்டுகளிலும் எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளேன் அனைத்து வார்டு சாலைகளிலும் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்துள்ளேன். முக்கிய சாலை சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து கொடுத்துள்ளேன் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன். பெரியார் நகர் பகுதியில் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்து அவர்களின் குறைகளை போக்கி உள்ளேன். மேலும் பேசிய எம்.எல்.ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார். சாத்தூர் பகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்ய காத்திருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்வது எனது கடமை எனக்கு ஒருமுறை வாக்களியுங்கள். 20 ஆண்டுகால நலத்திட்டங்களை செய்து முடிப்பேன் என்றார்.
வாக்கு சேகரிப்பின் போது அவருடன் அ.ம.மு.க. நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story