கட்டணமில்லா பயிற்சி மையங்கள்; அம்மா அகாடமி என்ற பெயரில் அமைக்கப்படும்; அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி பிரசாரம்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வி பாண்டி தேவகோட்டை ஒன்றியத்தில் முப்பையூர் திருவேகம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் அதன் பின்னர் காரைக்குடி நகர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தேவகோட்டை ஒன்றியம் முப்பையூர் திருவேகம்பத்துர் பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதை அறிந்தேன். வெற்றி பெற்றவுடன் இப்பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவேன். நீங்கள் எனக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும்போது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு விளையாட்டு மையமானது முழுமையான பயிற்சி வசதியுடன் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் தற்போது உள்ள நூலகங்களை தரம் உயர்த்தப்படும். வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த நூலகங்கள் தோறும் சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும். இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள், ரயில்வே உள்ளிட்ட மத்தியஅரசு பணிகள் ஆகியவற்றின் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி மையங்கள் அம்மா அகாடமி என்ற பெயரில் அமைக்கப்படும். இவ்வாறு பேசினார்.
பின்னர் காரைக்குடியில் பஜார் பள்ளிவாசல் முத்துப்பட்டணம் பள்ளிவாசல் காட்டுதலைவாசல் பள்ளி வாசல் ஆகிய இடங்களுக்குச் சென்ற வேட்பாளர் தேர்தேர்போகி வி.பாண்டி தொழுகை முடிந்து திரும்பியவர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சியினர் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் தேர்போகி வி.பாண்டியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story