கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3¾ லட்சம் பறிமுதல்


கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2021 8:37 AM IST (Updated: 28 March 2021 8:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


கண்காணிப்பு குழுக்கள்

கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் விதம் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

பறிமுதல்

இதனிடையே மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி வரை இதுவரை ரூ.4.27 கோடி ரொக்கம், ரூ.61 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், தங்கம் மற்றும் வெள்ளி என மொத்தம் ரூ.52.80 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் மாவட்டத்தில் ரூ.3.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்டவர்கள் சமர்ப்பித்த பின் மாவட்ட கண்காணிப்புகுழுவின் பரிந்துரையின் படி சம்பந்தப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

Next Story