பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை
பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை அவசியம் என்று கலெக்டர் நாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை
பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை அவசியம் என்று கலெக்டர் நாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பயன்படுத்தக்கூடாது
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொது இடங்களில் பிரசாரம் செய்யும் போதும், வாக்குசேகரிக்க செல்லும் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொது கூட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை (தெர்மல் ஸ்கினிங்) பரிசோதனைசெய்ய வேண்டும். கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது,
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற நடவடிக்கைகளை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
புகார் செய்யலாம்
அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்களின் மற்றும் ஊர்வலங்களின் நாள், நேரம் ஆகிய விபரங்களை முன்கூட்டியே தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
வாக்காளர்கள் தவிர தேர்தல் ஆணையத்தால் உரிய அனுமதி பெறாதவர் எவரும் வாக்கு சாவடிக்குள் செல்ல கூடாது. தேர்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story