விட்ட பணிகளை தொடர்ந்து செய்திட எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்; அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வேண்டுகோள்
விட்ட பணிகளை தொடர்ந்து செய்திட எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்குகள் சேகரிப்பு
பூம்புகார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் போட்டியிடுகிறார். அவர் செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய ஒன்றிய பகுதிகளிலும், காளகஸ்திநாதபுரம், உமையாள்புரம், மடப்புரம், ஆக்கூர் மாத்தூர், மருதம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது ஆக்கூர் பஸ் நிறுத்தம் அருகே வேட்பாளர் பவுன்ராஜுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவர் கூறிய தேர்தல் வாக்குறுதியை பூம்புகார் தொகுதியில் விரைவாக நிறைவேற்றி தருவேன். கடந்த 10 ஆண்டுகளில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 80 சதவீதம் வளர்ச்சி பணிகள் செய்து கொடுத்துள்ளேன்.
இரட்டை இலை
எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். விட்ட பணிகளை தொடர்ந்து செய்து தருகிறேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அப்போது வேட்பாளருடன் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story